Thursday, July 19, 2007

சர்க்கஸ் வாத்து

ஒரு சர்க்கஸ் சொந்தக்காரர் ஒரு கடைக்குள் நுழைந்தார். அங்கு பலர் கூடி ஒரு மேஜை முன்னால் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த சின்ன மேஜையில் ஒரு சட்டி தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு வாத்து நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த சர்க்கஸ் சொந்தக்காரர், அந்த வாத்தை அந்த கடையின் சொந்தக்காரரிடமிருந்து வாங்கிக்கொள்வதாகக் கேட்டார். அதன் பிறகு பேரம் பேசி சுமார் 10000 ரூபாய்க்கு அந்த வாத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன் சர்க்கஸ்காரர் சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த சர்க்கஸ்காரர் மிகுந்த கோபத்துடன் அந்தக் கடைக்குத் திரும்பி வந்தார். 'உன்னுடைய வாத்து பெரும் மோசடி. சர்க்கசுக்கு வந்திருந்த அனைவருக்கும் முன்னால் ஒரு சட்டியை கவிழ்த்துப்போட்டு அந்த வாத்தை நடனமாடச் சொன்னேன். அது ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை '

அந்தக் கடை சொந்தக்காரர் யோசித்துக்கொண்டே. ' ,ம்,,,ம்ம்... அந்த சட்டிக்குக்கீழே ஒரு பெரிய மெழுகுவர்த்தியை மறக்காமல் ஏற்றி வைத்தாயா ? ' என்று கேட்டார்.

Thursday, May 31, 2007

கடி ஜோக்ஸ்

அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?
அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்
........................
டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.
அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

........................................

ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே?

கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன்

................................

நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?

இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!

...........................

ஆபரேஷனுக்கு அப்புறம் கண்ணு நல்லா தெரியுது டாக்டர்..

நான் நர்ஸ்.. டாக்டர் அங்க இருக்கார்...!
__________________________________________________

தொலைக்காட்சித் தொடர்களின் முக்கிய விதிகள்ள்..

முக்கிய விதி:

எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.
இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.

3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.

4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.

5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.

6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.

7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.

8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.

9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.

10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.

11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.

12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.

13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?

நள்ளிரவில்........

ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள். திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால், அது அவள் கணவன்தான்.... ஆச்சரியம் தாங்காமல் கண்வனிடம் கேட்டாள்...

மனைவி : "என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?"

கணவன் : "20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில் கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்"

மனைவி : "சரி, அதுக்கென்ன இப்போ?"

கணவன் : (அழுதுகொண்டே) "இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்...."

செக்

கணவனிடம் மனைவி சொன்னாள், "அதென்னமோ தெரியல! இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் கடைசித் தாள் வரை கீழே வைக்க மனம் வரவில்லை."

அவள் குறிப்பிட்டது கணவனின் செக் புத்தகத்தை...........

லதா & தவளை

புதருக்குள் விழுந்துவிட்ட பந்தை எடுக்கச்சென்ற லதா ஒரு தவளை பொறியில் மாட்டியிருந்ததைக் கண்டாள். இவளைக்கண்டதும் தவளை சொன்னது, "பெண்ணே, என்னை இப்பொறியிலிருந்து விடுவித்தாயென்றால் உனக்கு மூன்று வரங்கள் தருவேன்." மகிழ்ந்துபோன லதா தவளையை விடுவித்ததும் அது சொன்னது, "ஆனால், நீ கேட்கும் வரங்கள் மூன்று மடங்காக உன் கணவனுக்கு வழங்கப்படும், சம்மதமா?"

வரம் கிடைத்தால்சரிதான் என்று சம்மதித்து முதல் வரத்தைக் கேட்டாள் லதா. "நான் உலகிலேயே மிகப்பெரிய அழகியாக வேண்டும்."
தவளை சொன்னது, "செய்கிறேன். ஆனால் உன் கணவன் உன்னைவிட மூன்று மடங்கு அழகில் சிறந்து விளங்குவான். மற்றப் பெண்கள் அவன் அழகில் மயங்குவர். சம்மதமா?"
"சம்மதம். எப்படியிருந்தாலும் நான் தானே உலகப்பேரழகி. அதனால் அவர் என்னை மட்டுமே விரும்புவார்", என்றாள் லதா. அதுபோலவே அவள் தவளையால் பேரழகியானாள். பெருமகிழ்ச்சியில் திளைத்த அவளிடம், "சரி உன் இரண்டாவது வரம் என்ன?", கேட்டது தவளை. "நான் உலகிலேயே பெரும் பணக்காரியாகவேண்டும்", என்றாள் லதா. தவளை அவளிடம் மறுபடியும், "உன் கணவன் உன்னைவிட மூன்றுமடங்கு பணக்காரனாவான், பரவாயில்லையா?" என்றது. லதா தவளையிடம், "அவர் என் கணவன் என்றபடியால் அவர் பணமும் என் பணம்தானே? ஆகவே சம்மதம்.", என்றாள். அவள் விருப்பப்படியே பெரும் பணக்காரியானாள்.

"மூன்றாவது வரம் என்ன?", கேட்டது தவளை. நன்றாக யோசித்துவிட்டுத் தன் கணவனின் கதையை முடிக்க நினைத்த லதா சொன்னாள், "எனக்கு மெல்லிய மாரடைப்பு வரவேண்டும்!"

மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்!

என் மனைவி கலங்கடிக்கும் வண்ணம் உடுத்துவாள். அவள் சமைப்பதும் ஏறக்குறைய அப்படித் தான் இருக்கும்!
--- ஹென்னி யங்மேன்

என் மனைவியும் நானும் 20 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பின்னர் சந்தித்தோம்!
--- ராட்னி டேஞ்சர்·பீல்ட்

ஒரு நல்ல மனைவி தன் கணவனை நிச்சயம் மன்னித்து விடுகிறாள், அவள் தவறு செய்யும்போது!
--- மில்டன் பெர்ல்

ஒரு நீதிபதி முன்னிலையில் என் திருமணம் நடந்தது. அச்சமயம் நான் உணரவில்லை ஒரு ஜூரியை அழைத்திருக்க வேண்டும் என்பதை!
--- ஜார்ஜ் பர்ன்ஸ்

ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் ரகசியம், ரகசியமாகவே இன்று வரை இருந்து வருகிறது!

நான் என் மனைவிக்கு ஒரு புதிய காரை பரிசாக வழங்கினேன். சற்று நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்த அவள், கார்பரேட்டரில் தண்ணீர் இருப்பதாகக் கூறினாள். நான் கார் எங்கே என வினவியதற்கு, அவள் அது ஏரியில் இருப்பதாக பதிலுரைத்தாள்!!!
--- ஹென்னி யங்மேன்

மனதில் கோபத்தோடு, உறங்கச் செல்லாதீர்கள்! விழித்திருந்து சண்டை போடுவது எவ்வளவோ மேல்!!!
--- ·பில்லிஸ் டில்லர்

X: என் மனைவி ஒரு தேவதை!
Y: நீ அதிர்ஷ்டக்காரன்! என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்!

ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளை எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் இருக்க ஒரே சிறந்த வழி, அதை ஒரே ஒரு முறை மறந்து விடுவது தான்!!!

திருமணத்தால் ஏற்படும் சிறந்த விஷயங்களில் ஒன்று என நான் கருதுவது, ஒரு கணவனாகவும், தந்தையாகவும் சொல்ல நினைப்பவற்றை நான், என் வீட்டில், வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்ல முடிகிறது. என்ன, யாரும் அவற்றுக்கு துளியும் காது கொடுப்பது கிடையாது!!!

திருமணம் என்பது புத்திசாலித்தனத்தின் மீதான கற்பனையின் வெற்றி!
இரண்டாவது திருமணம் என்பது அனுபவத்தின் மீதான நம்பிக்கையின் (!) வெற்றி!!

அமெரிக்காவில், திருமணமானவர்களில் 80 சதவிகிதம் பேர், தத்தம் மனைவிகளை ஏமாற்றுகின்றனர். மீதமுள்ளோர், ஐரோப்பா சென்று ஏமாற்றுகின்றனர்!!!

திருமணம் ஆகும் வரை உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்பதை நான் உணரவில்லை! ஆன பின், காலம் கடந்து விட்டது!!!

கடந்த 18 மாதங்களாக நான் என் மனைவியுடன் பேசவில்லை! அவள் பேசும்போது குறுக்கிட எனக்கு விருப்பமில்லை என்பதால்!!!